search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் பலி"

    கோவை அருகே மொபட்டில் வேலைக்கு சென்ற போது லாரியின் பின் சக்கரத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை:

    கோவை மதுக்கரை அருகே உள்ள குமாரபாளையத்தை சேர்ந்தவர் ரத்தினசாமி. இவரது மனைவி சவிதா (வயது 40). டைபிஸ்ட்டாக வேலை பார்த்து வந்தார்.

    இன்று காலை இவர் வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக தனது மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டார். மொபட் மதுக்கரை ரோட்டில் சென்றபோது அந்த வழியாக லாரி ஒன்று வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக லாரி மொபட் மீது உரசியுள்ளது. இதில் சவிதா நிலைதடுமாறி மொபட்டில் இருந்து நடுரோட்டில் விழுந்தார்.

    அப்போது லாரியின் பின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது.

    இதில் சவிதா சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டு உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த தகவல் அறிந்ததும் மதுக்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் விபத்தில் பலியான சவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீவலப்பேரி அருகே குளத்தில் மூழ்கிய இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நெல்லை:

    பாளை அருகே உள்ள சீவலப்பேரியை அடுத்த குப்பை குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் மாரிதுரை.

    இவரது மகள் ஹரிச்சந்திரா (வயது 19). இவரும், இவரது தாயார் சரஸ்வதியும் நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள குளத்தில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஹரிச்சந்திரா ஆழமான பகுதியில் மூழ்கினார்.

    உடனடியாக சரஸ்வதியும் மற்றவர்களும் கூச்சல் போட்டனர். அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து தண்ணீரில் மூழ்கி கிடந்த ஹரிச்சந்திராவை மீட்டனர். மயக்க நிலையில் இருந்த அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் ஹரிச்சந்திரா பரிதாபமாக இறந்தார். இது குறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மொபட் மீது லாரி மோதிய விபத்தில் இளம்பெண் தலை நசுங்கி பலியானார். வாலிபர் படுகாயமடைந்தார்.

    மதுரை:

    மதுரை திருப்பாலை அன்புநகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் கீர்த்தனா (வயது 19). இவர் நேற்று காலை தனது உறவினர் வெங்கடராகவ கிருஷ்ணன் (20) என்ப வருடன் மொபட்டில் வெளியே புறப்பட்டார்.

    தேனி மெயின் ரோடு முடக்குச்சாலை சந்திப்பில் சென்று கொண்டிருந்தனர். அங்குள்ள வளைவை கடக்க முயன்றபோது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்தனர். அப்போது லாரி டயர் கீர்த்தனா மீது ஏறியது. இதில் அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    படுகாயமடைந்த வெங்கடராகவகிருஷ்ணன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    விபத்து குறித்து கரிமேடு போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    காளவாசல்-தேனி பிரதான சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. இருபுறமும் கடைகள் இருப்பதால் அங்கு வருபவர்கள் தங்களது வாகனங்களை முறையாக நிறுத்துவதில்லை.

    மேலும் காளவாசல் முதல் முடக்குச்சாலை வரை சென்டர் மீடியன் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது என்ற எண்ணத்தில் அமைக்கப்பட்டது. ஆனால் இப்போது வழக்கதை விட அதிக நெரிசல் ஏற்படுகிறது.

    மேலும் காளவாசல் பஸ் நிறுத்தத்தில் எந்த பஸ்களையும் நிறுத்தாமல் காளவாசல் திரும்பும் இடத்தில் அனைத்து பஸ்கள், ஷேர்ஆட்டோக்களை நிறுத்துவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை காளவாசல் பகுதியில் போக்கு வரத்தை ஒழுங்குப்படுத்தும் போலீசார் கண்டு கொள்வதில்லை.

    எனவே இனிமேலாவது தனி கவனம் செலுத்தி காளவாசல்-தேனி பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களை ஒழுங்குப்படுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செய்துங்கநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    செய்துங்கநல்லூர்:

    நெல்லை மாவட்டம் சாம்பவர் வடகரையை சேர்ந்தவர் மதன் (வயது 30). இவர் தனது மனைவின் தங்கையான மேகலா (18) என்பவருடன் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் ஆழ்வார்திருநகரியில் இருந்து சாம்பவர் வடகரையை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்கள் பாளை கிருஷ்ணாபுரம் வானிலை ஆராய்ச்சி மையம் அருகில் வந்த போது அந்த வழியாக திருச்செந்தூரில் இருந்து அம்பை வந்து கொண்டிருந்த வேன் எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட மேகலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மதன் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவந்திபட்டி இன்ஸ்பெக்டர் ராணி, சப்-இன்ஸ்பெக்டர் பிரதாப் உள்ளிட்ட போலீசார் படுகாயமடைந்த மதனை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் பலியான மேகலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வேன் டிரைவர் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த பகுதியில் கடந்த 1 மாதத்தில் சுமார் 3 விபத்து நடந்துள்ளது. எனவே இவ்விடத்தில் பயணிகள் கவனத்தினை ஈர்க்கும் வண்ணம் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கறம்பக்குடி அருகே லாரிக்கு வழி விடுவதற்கு முயன்ற போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள தளிகைவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகுரு (வயது 35).இவரது மனைவி சூரியகலா (27). இந்த தம்பதிக்கு 2 குழந் தைகள் உள்ளனர். பாலகுரு சிங்கப்பூரில் வேலை பார்த்து பார்த்து விட்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.

    இந்நிலையில் பாலகுருவும் அவரது மனைவி சூரியகலாவும் மோட்டார் சைக்கிளில் இலுப்பூரில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்று விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.  

    கறம்பக்குடி அருகே சென்ற போது எதிரே வந்த லாரிக்கு வழி விடுவதற்கு முயன்ற போது எதிர்பாரதவிதமாக மோட்டார் சைக்கிளிலில் இருந்து இருவரும் தவறி கீழே விழுந்தனர். இதில் பாலகுரு, சூரியகலா படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் கறம்பக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் சூரியகலா பரிதாபமாக  இறந்தார். பாலகுரு சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து கறம்பக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    வெள்ளகோவிலில் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் இளம்பெண் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் மூலனூர் ரோட்டை சேர்ந்தவர் திருமூர்த்தி கட்டிடத்தொழிலாளி. இவர் குடும்பத்துடன் அங்குள்ள செங்கல்சூளை குடியிருப்பில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    இவரது மகள் முத்துலட்சுமி (வயது 20). இவர் அங்குள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். முத்துலட்சுமிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தன.

    இந்தநிலையில் இன்று காலை முத்துலட்சுமி மூலனூர் சாலையில் சைக்கிளில் சென்றார். அப்போது பரமகுடியில் இருந்து ஈரோடு சர்க்கரை ஆலைக்கு மரத்தூள் ஏற்றிய லாரி வந்தது.

    எதிர்பாராதவிதமாக லாரி முத்துலட்சுமி ஓட்டி வந்த சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அதே லாரி முத்துலட்சுமி தலையில் ஏறி இறங்கியது. இதில் மூளை சிதறி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    விபத்தை ஏற்படுத்திய டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓட முயன்றார். அந்த பகுதிமக்கள் அவரை மடக்கிப்பிடித்தனர். இது குறித்து வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முத்துலட்சுமியின் உடலை மீட்டு காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    கோவை கணபதி டெக்ஸ்டூல்ஸ் பாலம் அருகே உள்ள தண்டவாள பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ரெயிலில் அடிப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரண நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை கணபதி டெக்ஸ்டூல்ஸ் பாலம் அருகே உள்ள தண்டவாள பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ரெயிலில் அடிப்பட்டு பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் ஏசு தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று ரெயிலில் அடிபட்டு இறந்த பெண்ணின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து ரெயிலில் அடிப்பட்டு இறந்த இளம்பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திண்டுக்கல் அருகே ரெயிலில் அடிபட்டு இளம்பெண் பலியானார். இறந்தவர் யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள மொட்டணம்பட்டி ரெயில்வே கேட் தண்டவாளத்தில் இன்று காலை சுமார் 18 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    அவர் யார்? எந்த ஊர்? என்ற விபரம் தெரியவில்லை. சுடிதார் அணிந்திருந்தார். திருமணம் ஆகாதவர் போல் இருந்தார்.

    இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை அருகே ரோட்டில் பாம்பு குறுக்கே புகுந்ததால் பைக்கில் உறவினருடன் சென்ற இளம்பெண் பரிதாபமாக பலியானார்.
    மதுரை:

    சென்னை போரூர் ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்த பெரியகருப்பன் மகள் கார்த்திகா (வயது21). இவர் 2 நாட்களுக்கு முன்பு உசிலம்பட்டி அருகே உள்ள சடைச்சிப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார்.

    அப்போது உறவினர் சச்சின்பிரான் (20) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். வாலாந்தூர்-பாப்பாப்பட்டி ரோட்டில் சென்றபோது சாலையின் குறுக்கே திடீரென பாம்பு புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சச்சின்பிரான் திடீரென பிரேக் போட்டார். இதனால் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே சரிந்தது.

    இதில் கீழே விழுந்த கார்த்திகா நடுரோட்டில் ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கார்த்திகா பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக கார்த்திகாவின் தந்தை பெரியகருப்பன் வாலாந்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வனிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.#tamilnews
    நாகர்கோவில் அருகே உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்ட இளம்பெண் குளியல் அறையில் மயங்கி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    என்.ஜி.ஓ. காலனி:

    நாகர்கோவில் அருகே உள்ள கீழஉடையப்பன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் பால்துரை. இவரது மனைவி அனுராணி (வயது 35). இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை.

    அனுராணி உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்டார். இதற்காக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். நேற்று வீட்டில் உள்ள குளியலறைக்கு குளிக்கச் சென்றார். அங்கு திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதை பார்த்த பால்துரை சத்தம் போட்டு அலறினார்.

    அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று அனுராணியை மீட்டு அவர் சிகிச்சை பெற்று வந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுசீந்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அனுராணிக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகளே ஆவதால் அவரது மரணம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது. #tamilnews
    சேலத்தில் பன்றிகாய்ச்சலுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி புவனேஷ்வரி (வயது 39). இவருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்தது. டாக்டர்களின் ஆலோசனைகளின் பேரில் மருந்து மாத்திரைகள் சாப்பிட்ட பின்பும் காய்ச்சல் குணமாகவில்லை. இதனால் நேற்று முன்தினம் புவனேஷ்வரி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். 

    அவரது ரத்த மாதிரியை எடுத்து டாக்டர்கள் பரிசோதித்து பார்த்த போது அவருக்கு பன்றி காய்ச்சல் தொற்றி இருப்பதை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து புவனேஷ்வரிக்கு பன்றி காய்ச்சல் குணமடைய ஊசி மருந்துகள் செலுத்தி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    திண்டுக்கல் அருகே பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இளம்பெண் பரிதாபமாக பலியானார். #swineflu

    குள்ளனம்பட்டி:

    தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் தொடர்ந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்திலும் பன்றிகாய்ச்சல் தாக்கம் அதிகரித்துள்ளது.

    பழனியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜான்சி என்பவர் பன்றிகாய்ச்சலால் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அழகாபுரியை சேர்ந்த குமசேரன் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் பொதுமக்களிடையே பீதி அதிகரித்துள்ளது.

    திண்டுக்கல் அருகே மருனூத்து ஊராட்சிக்குட்பட்ட பெருமாள்புரத்தை சேர்ந்தவர் சுல்தான்பேகம் (வயது27). காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். ரத்த மாதிரி பரிசோதனையில் பன்றிகாய்ச்சல் அறிகுறி தென்பட்டதால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சுல்தான் பேகம் பரிதாபமாக உயிரிழந்தார். #swineflu

    ×